எமது ஆலயத்திற்கான புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது மேற்படி ஆலயமுதல்வர்கள் சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் , மகோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ தி. ஜெயராஜ்குருக்கள் மற்றும் தேவசபா மண்டப திருப்பணி உபயகார்கள் திருமதி.துரைராசா புவனம் குடும்பத்தினர் (ஆலய தேர்த்திருவிழா உபயகார்கள்) ஆகியேரினால் 07.04.2016 வியாழக்கிழமை அன்று சுபவேலையில் அடிக்கல் நாட்டப்பட்டு தெடர்ந்து தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் திருப்பணி மேற்கொள்ளப்படுகின்றன.