கடந்த 20.04.2016 முதல் எமது ஆலயத்தின் சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை ஊடாக சைவச்சிறார்களுக்கான அறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு யோகாசன அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் சிறார்கள் தமது பெற்றோருடன் சமூகம்தருமாறு கேட்டுக்கொள்வதோடு, யோகாசன வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பெரியவர்களும் கலந்துகொள்ளமுடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.